ரஷ்யா அமெரிக்கப் போர்விமானங்கள் தனது எல்லைக்குள் வருவதைத் தடுக்க ஆர்க்டிக் (Arctic) பெருங்கடலில் அவற்றை வழிமறித்ததாகத் தெரிவித்துள்ளது. பேரன்ட்ஸ் (Barents) கடலுக்கு மேல் பறந்த அந்த இரண்டு அமெரிக்கப் போர்விமானங்களையும் தனது எல்லைக்குள் நுழைய விடாமல் தடுக்க போர்விமானங்களை அனுப்பியதாகவும் ரஷ்யா சொன்னது.
அமெரிக்க ராணுவம் அடிக்கடி அனைத்துலகக் கடற்பகுதிகளில் அதன் விமானங்களைப் பறக்க விடுவதுண்டு. அவை அனைத்துலகச் சட்டத்துக்கு உட்பட்டு பொதுவான கடற்பகுதியில் பறப்பதாகவும் அமெரிக்க ராணுவம் கூறுகிறது. அதற்குப் பதிலடியாக ரஷ்யா அண்மை மாதங்களில் மேலும் கடுமையான பாவனைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
கருங்கடலில் அமெரிக்கா ஆளில்லா வானூர்திகளைப் பறக்கவிடுவது நேரடி ராணுவ மோதல்களுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்று கடந்த மாதம் ரஷ்யா எச்சரித்தது.





















