தீபகற்ப மலேசியாவின் வடபகுதியில் மேற்கு கடற்கரை பகுதியில் பெர்லிஸ் மாநிலம் உள்ளது. இம்மாநிலம் பெர்லிஸ் இந்திரா கயாங்கான் என்று அதிகராப்பூர்வமாக அழைக்கப்படுகிறது. மலேசியாவின் மிகச் சிறிய மாநிலமாகவும் இது திகழ்கிறது.
இம்மாநிலத்தில் உள்ள சுபிங் மலேசியாவின் மிகச் சூடான பகுதியாக திகழ்கிறது. மிகப் பெரிய கரும்புத் தோட்டங்களையும் பெர்லிஸ் கொண்டிருக்கிறது.

அழகிய கிராமங்களும் கை படா இயற்கை அழகுகளும் பெர்லிஸின் தன்னிகரற்ற சொத்துகளாகும். கெலாம் குகைகள், கோத்தா காயாங் அருங்காட்சியகம், பெர்லிஸ் மாநில பூங்கா, லங்காவியின் நுழைவாயிலாக விளங்கும் கோல பெர்லிஸ், ஊத்தான் லிப்பூர் புக்கிட் ஆயர் ஆகியவை பெர்லிஸின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.
இம்மாநிலத்தில் பூயூ மீன் வகை,. நாசிக் கண்டார், ரொட்டி சானாய் மிகவும் பிரபலமானது. பெஸ்தா ஆயர் கோல பெர்லிஸ், அல்லது பெர்லிஸ் நீர்த் திருவிழா கண்கவர் நிகழ்ச்சியாக கடற்கரைப் பகுதிகளில் நடந்தேறும்.

ஆர்க்கெட் நியாகா பாடாங் பெசார், தாசேக் மெலாத்தி, மனமகிழ் பூங்கா, வாங் கிளியான் வார இறுதி சந்தை, தாமான் ஹெர்பா, பெர்லிஸ் பாம்புப் பண்ணை, ஆராவ் அரச கேலரி, தாமான் பூங்கா கெர்த்தாஸ், பெர்லிஸ் திராட்சை தோட்டம் போன்றவை மிகப் பிரபலமான சுற்றுத்தலங்களாக விளங்குகின்றன.
புக்கிட் ஆயர் மனமகிழ் வனம் என்பது 12 ஹெக்டரில் அமைந்திருக்கிறது. இங்கு ஆயிரக்கணக்கான மூலிகைச் செடிகள், அல்லது மருத்துவ செடிகள் உள்ளன. தாசேக் மெலாத்தா மனமகிழ் பூங்காவானது சுற்றுப்பயணிகளின் மனங்கவர்ந்த இடமாக பெயர் பெற்றிருக்கிறது. மெதுவோட்டம், மலையேறுதல், மீன் பிடிப்பு, படகு சவாரி போன்றவை சுற்றுப்பயணிகளின் மனங்கவர்ந்த நடவடிக்கைகளாக உள்ளன.

இந்த பூங்காவில் சிறார்களுக்கான விளையாட்டு மைதானமும் உள்ளது. இங்கிருந்து பைனாக்குலர் மூலம் பல்வேறு பறவைகளை கண்டு களிக்கலாம். பெர்லிஸ் மாநிலப் பூங்கா, 5,000 ஹெக்டரில் அமைந்துள்ளது,. இந்த பூங்கா பாதுகாக்கப்பட்ட 2 வனப்பகுதிகளை கொண்டிருக்கிறது.
மாத்தா ஆயர் ஃபோரஸ்ட் ரிசர்வ், வாங் மூவ் ஃபோரஸ்ட் ரிசர்வ் ஆகியவையே அந்த 2 வன பூங்காக்கள் ஆகும். இங்கு 600 வகையான பூக்கள் உள்ளன. 200 பறவைகள். 70 வகையான பாலூட்டிகள் இங்கு உள்ளன.மொத்தத்தில் இயற்கை வளங்களின் பொக்கிஷமாக பெர்லிஸ் மாநிலம் திகழ்கிறது.





















