சிறப்புக் குழந்தைகளுக்கான மையத்தில் சிறுவனை துன்புறுத்தியதாக ஆசிரியர் தினேஷ் மீது குற்றச்சாட்டு

சிறப்புக் குழந்தைகளுக்கான மையத்தில் ஆட்டிஸம் சிறுவனை  கடந்த வாரம் துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினார். 33 வயதான எம்.தினேஷ் மீது ஜூலை 16ஆம் தேதி காலை 11.50 மணியளவில்  குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் ஆறு வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 352 ஆவது பிரிவின் கீழ் கட்டமைக்கப்பட்ட குற்றச்சாட்டில், மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை, அதிகபட்சமாக 1,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். மாஜிஸ்திரேட் ஷாஹரில் அனுவார் அகமது முஸ்தபா, தினேஷுக்கு 1,000 ரிங்கிட் ஜாமீன் வழங்கி, பாதிக்கப்பட்டவரை மிரட்ட வேண்டாம் என்று உத்தரவிட்டார். நீதிமன்றம் ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு வழக்கினை ஒத்தி வைத்தது. அரசு தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் அஸ்மா ஜம்ரியும், தினேஷ் சார்பில் ஒய் ஷர்வின் நாயர் ஆஜராகி வாதாடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here