நேபாளத்தில் விமான விபத்து: 18 பேர் பலி!

காத்மாண்டு:

நேபாளத்தில் 19 பேருடன் புறப்பட்ட விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து சறுக்கி, தரையில் மோதி தீப்பிடித்தது.

இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். விமானி ஒருவர் மட்டும் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து பொக்காராவுக்கு சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் 19 பேருடன் புறப்பட்டது, திடீரென ஓடுபாதையில் இருந்து சிறிது தூரம் பறந்ததும், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இதனால் விமானம் தீப்பிடித்து எரிந்தது.

உயிரிழந்த 18 பேரில் ஐவரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், ஏனையோரை மீட்கும்பணி நடந்துவருவதால், திரிபுவன் அனைத்துலக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here