கோலாலம்பூர்:
2024 பாரிஸில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக்கில் நாட்டிற்கு முதல் தங்கப் பதக்கத்தை வெல்லும் நோக்கத்தில் களமிறங்கியுள்ள தேசிய விளையாட்டு வீரர்கள் குழு வெற்றிபெற அனைவரும் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அழைப்பு விடுத்துள்ளார்.
” MAS குழு’ இன் வெற்றிக்காகவும், அவர்கள் பதக்கங்களைப் பெற்று, வரலாற்றைப் படைக்கவும் வலிமையான ஆதரவை வழங்கவும், அனைத்து மலேசியர்களையும் பிரார்த்தனை செய்யுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
“எங்கள் 26 தேசிய விளையாட்டு வீரர்களுக்கும் நல்வாழ்த்துக்கள் என்று கூறிய பிரதமர், அனைத்து மலேசியர்களின் பிரார்த்தனைகளும் பாரிஸில் உங்களுடன் உள்ளன என்று அவர் பேஸ்புக் பதிவில் 56 வினாடிகள் நீடித்த ஒரு குறுகிய வீடியோ செய்தியில் கூறினார்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பில் போட்டியானது இந்தாண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்டு 11 வரை பாரிஸில் நடைபெறுகிறது.




















