பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது, இன்று துவங்க உள்ளது. துவக்க விழாவுக்கு முன்பே, சில போட்டிகள் நடைபெற ஆரம்பித்தன. அது, பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான தகுதி சுற்று போட்டிகள்தான்.
எப்போது துவங்கும்?
பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு துவங்க உள்ளது. ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளவுள்ள அனைத்து நாடுகளும் அணி வகுப்பில் கலந்துகொள்ள உள்ளதால், சுமா 3:30 மணி நேரம் வரை, துவக்க விழாவானது நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் முதல்முறை:
இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் துவக்க விழாக்கள் எல்லாம், ஸ்டேடியத்தில்தான் நடைபெறும். ஆனால், பாரிஸ் ஒலிம்பிக் துவக்க விழா, வரலாற்றில் முறையாக மைதானத்திற்கு வெளியே, நதிக்கரை ஓரம் நடைபெறவுள்ளது. மொத்தம் 3 லட்சம் பார்வையாளர்கள் அமரும் வகையில், அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.மழைக்கு வாய்ப்பு:
பாரிஸில் உள்ள செய்ன் நதிக்கரை ஓரம் துவக்க விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில், துவக்க விழாவின் போது லேசான தூரல் விழும் என அந்நாட்டு வானிலை மையம் கணித்துள்ளதால், துவக்க விழா வெற்றிகரமாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்ததுள்ளது.










