நான் காணாமல் போகவில்லை: சுதந்திரமாக இருக்க சகோதரி வீட்டில் இருந்து வெளியேறினேன்

20 வயதான நூர் ஷபிலா சுஐப் சம்பந்தப்பட்ட காணாமல் போன வழக்கை போலீசார் தீர்த்து வைத்துள்ளனர். தான் சுதந்திரமாக இருக்க தனது சகோதரியின் வீட்டை விட்டு மே  மாதம் வெளியேறியதாக பெண் கூறியிருக்கிறார். செராஸ் காவல்துறைத் தலைவர் ரவீந்தர் சிங் கூறுகையில், ஷஃபிலாவின் சகோதரி மே 11 அன்று செராஸில் உள்ள தங்கள் குடியிருப்பை விட்டு வெளியேறிய பின்னர், அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று புகார் அளித்திருந்தார்.

ஜூலை 16 அன்று, அவரின் தாயார் சபாவில் உள்ள மெங்கடலில் மற்றொரு புகாரினை தாக்கல் செய்தார். ஜூன் 8 அன்று ஷஃபிலா தான் எப்படி இருக்கிறேன்  என்று கேட்க அழைத்தார். ஆனால் அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அந்த புகாரில் தெரிவித்திருந்தார். சிலாங்கூர் டேசா பெட்டாலிங்கில் உள்ள ஒரு நர்சரியில் பராமரிப்பாளராக இருந்த ஷஃபிலா காணாமல் போனது குறித்து போலீசார் பின்னர் நோட்டீஸ் வழங்கினர்.

ஜூலை 27 அன்று, நோட்டீஸைப் பார்த்த ஷஃபிலா காவல்துறையைத் தொடர்பு கொண்டார். பின்னர் அவர் நேற்று பினாங்கில் உள்ள பயான் லெபாஸில் ஒரு போலீஸ் புகாரை தாக்கல் செய்தார்.தான்  காணாமல் போகவில்லை என்றும் சுதந்திரமாக இருக்க தனது சகோதரியின் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here