நெங்கிரி தேர்தல்: நாளை குவா மூசாங்கில் மூன்று முக்கிய சாலைகள் மூடப்படும்

குவா மூசாங்:

நெங்கிரி மாநில இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அச்செயல்முறையை எளிதாக்கும் வகையில் குவா மூசாங் மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய சாலைகள் நாளை தற்காலிகமாக மூடப்படும்.

காலை 7 மணி முதல் நண்பகல் வரை குறித்த சாலைகள் மூடப்படும் என கிளந்தான் மாநில காவல்துறை தலைவர் டத்தோ முஹமட் ஜாக்கி ஹருன் தெரிவித்தார்.

எனவே சாலைப் பயனாளிகள் தங்கள் பயணங்களை நன்கு திட்டமிடவும், மூடப்பட்ட பாதைகளை அடையாளம் காணவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்தவும் அவர் அறிவுறுத்தினார்.

வேட்புமனுத் தாக்கலின் போது சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைத்து இணங்க வேண்டும்” என்று இன்று (ஆக. 2) அவர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here