பொட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காணவில்லை- போலீஸ்

கோலாலம்பூர்:

காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட லின் யூ செங் என்ற 14 வயது சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர்.


குறித்த 14 வயது சிறுமி கடைசியாக கடந்த மே 25 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிளாக் 13, யூனிட் 05, டாத்தரான் ப்ரிமா காண்டோமினியம், ஜாலான் ப்ரிமா காண்டோமினியம், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தனது வீட்டில் காணப்பட்டார் என்றும், இது தொடர்பில் காவல்துறையில் நேற்று மாலை புகாரளிக்கப்பட்டதாகவும் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஷாருல்நிஜாம் ஜாபர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் தொடர்பான ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வருமாறு அல்லது பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் செயல்பாட்டு அறையை 03-79662222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here