‘துலீப் டிராபி 2024’ இந்திய அணி அறிவிப்பு: கோலிக்கு கேப்டன் பதவி?

வங்கதேச டெஸ்ட் தொடருக்கு முன், இந்திய அணியானது துலீப் டிராபி தொடரில் விளையாட உள்ளது.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில், ஒரு போட்டியில் கூட வெற்றியைப் பெறாமல் இந்தியா தோல்வியை சந்தித்தது. இதனால், இந்திய அணி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், பிசிசிஐயையும் அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.

இந்திய அணியின் அனைத்து வீரர்களும், இனி வரும் அனைத்து உள்ளூர் தொடர்களில் பங்கேற்க வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. சரியான காரணங்களை கூறாமல், உள்ளூர் தொடரை புறக்கணிக்கும் வீரர்களுக்கு, இந்திய அணியில் இடம் வழங்கப்படாது என்றும் திட்டவட்டமான முடிவில் பிசிசிஐ இருக்கிறது.

துலீப் டிராபி 2024

இந்திய அணி அடுத்து வங்கதேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் போட்டி, செப்டம்பர் 19ஆம் தேதியும், அடுத்த போட்டி 27ஆம் தேதியும் நடைபெறும்.

வங்கதேச டெஸ்ட் தொடருக்கு முன், இந்திய அணியானது துலீப் டிராபி தொடரில் பங்கேற்க உள்ளது. இத்தொடர் செப்டம்பர் 5ஆம் தேதி துவங்க உள்ளது. இந்திய அணியினர் இந்தியா ஏ, பி, சி, டி அணிகளாக பிரிந்து விளையாட உள்ளனர். விராட் கோலிக்கு கேப்டனாக வாய்ப்பு கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா ஏ அணி

இந்தியா ஏ அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பார். மேலும், தேவ்தத் படிக்கல், ராஜத் படிதர், திலக் வர்மா, சர்பரஸ் கான், இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், ஷாம்ஸ் முலானி, முகமது சிராஜ், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற உள்ளனர்.

இந்தியா பி அணி

இந்தியா பி அணிக்கு ஐஸ்பரீத் பும்ரா கேப்டனாக செயல்பட உள்ளார். மேலும், யாஷஸ்வி ஜெய்ஷ்வால், சாய் சுதர்ஷன், புஜாரா, ரஹானே, சூர்யகுமார் யாதவ், கேஎஸ் பரத், சாய் கிஷோர், குல்தீப் யாதவ், ஆகாஷ்தீப், உம்ரான் மாலிக்.

இந்தியா சி அணி

இந்தியா சி அணிக்கு ஷுப்மன் கில்லை கேப்டனாக போட்டனர். ஆனால், அழுத்தம் இல்லாமல் விளையாட விரும்புகிறேன் எனக் கூறியதால், அந்த அணிக்கு கோலியை கேப்டனாக போட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த அணியில், ருதுராஜ் கெய்க்வாட், அபிமன்யூ ஈஸ்வரன், ரிங்கு சிங், துரூவ் ஜோரல், அக்சர் படேல், அஸ்வின், உமேஷ் யாதவ், அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியா டி அணி

இந்தியா டி அணிக்கு ரிஷப் பந்த் கேப்டனாக செயல்பட உள்ளார். பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், ஜடேஜா, சௌரப் குமார், முகமது ஷமி, ஆவேஷ் கான், யாஷ் தயாள் ஆகியோர் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here