நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லத் தவறியதை அடுத்து இலக்கை அடைவதில் தோல்வி கண்டுள்ளதை மலேசிய பூப்பந்து சங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
இருப்பினும் அந்த அடைவுநிலை குறித்து தாம் கருத்து ஏதும் சொல்லப்போவதில்லை என சங்கத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ கென்னி கோ தெரிவித்துள்ளார்.
மாறாக உடனடியாக அந்த விவகாரத்தை மறந்து வருங்காலத்தில் தேசிய விளையாட்டாளர்களின் அடைவு நிலை மீது கவனம் செலுத்தப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் இலக்கை அடையத் தவறினாலும் தேசிய பூப்பந்து அணி இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று தந்துள்ளது. சிலர் அதனை வெறும் வெண்கலப் பதக்கம்தானே என்று கூறலாம். ஆனால் அந்த இடத்தை அடைவது அவ்வளவு சுலபமில்லை என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில் தேசிய ஆண்கள் இணையர் பிரிவு விளையாட்டாளர்களான ஏரன் சியா – சோ உய் இக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.








