சொத்துகளை அறிவிக்க மகாதீர் மகன்களுக்கு கடைசி அவகாசம்

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் இரண்டு  மகன்களின் சொத்துக்களை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அறிவிக்க கடைசி ஒரு மாத கால அவகாசத்தை வழங்கியுள்ளது. எம்ஏசிசி தலைமை ஆணையர் அஸாம் பாக்கி கூறுகையில், இருவரும் செப்டம்பர் நடுப்பகுதி வரை தங்கள் சொத்துகளை அறிவிக்க வேண்டும். அதுதான் அவர்களுக்கான  இறுதி கால அவகாசமாகும் என்றார் அவர்.

அவர்கள் இணங்கத் தவறினால், எம்ஏசிசி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும் என்று அவர் இன்று இங்குள்ள ஹோட்டல் ஒன்றில் எம்ஏசிசி நிகழ்ச்சியைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார். மே மாதம், MACC மிர்சான் மகாதீர், அவரது சகோதரர் மொக்ஸானி ஆகியோருக்கு அவர்களின் சொத்துக்களை அறிவிப்பதற்கான நீட்டிப்பினை வழங்க ஒப்புக்கொண்டது. இருப்பினும் கொடுக்கப்பட்ட நீட்டிப்பு குறித்து அஸாம் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

மகாதீர் பிரதமரான 1981 ஆம் ஆண்டுக்கு முந்தைய தங்கள் சொத்துக்களை அறிவிக்கும்படி ஜனவரி மாதம் MACC ஆல் உடன்பிறப்புகளுக்கு பிப்ரவரி மாதம் உத்தரவிடப்பட்டது. அந்த  காலக்கெடுவிற்கு பின் சகோதரர்கள் இரண்டு நீட்டிப்புகளைப் பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here