கோலாலம்பூர்:
பச்சிளம் சிசு ஒன்று தொப்புள் கொடியுடன் பாரிட் புந்தார், பெக்கான் தித்தி செரோங்கில் உள்ள ஒரு பட்டறையின் பேசினில் கிடந்தது.
புதன் கிழமை மாலை 4.50 மணியளவில் குழந்தையின் அழு குறல் கேட்டு வழிப்போக்கர் ஒருவர் அங்கு வந்து எட்டிப் பார்க்க பச்சிளம் சிசு ஒன்று தொப்புள் கொடியுடன் கைவிடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அந்நபர் பின்னர் அக்குழந்தையை அருகில் உள்ள சமூக நல மையத்தில் ஒப்படைத்தார் என்று பேராக் போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி மாட் அரிஸ் கூறினார்.
அந்நபர் பின்னர் போலீஸுக்கு தகவல் அளித்தார் என்றும் குறிப்பிட்ட அவர், புலன் விசாரணை தொடங்கிவிட்டது என்றார்.