கோலாலம்பூர்:
இந்தியாவின் 78ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு கோலாலம்பூர், ஜாலான் டூத்தாவில் உள்ள இந்தியா ஹவுசில் India House இன்று ஆகஸ்டு 15 ஆம் தேதி காலை 8 மணிக்கு கொடி ஏற்றும் வைபவம் நடைபெற்றது.

மலேசியாவுக்கான இந்திய ஹை கமிஷனர் பி.என்.ரெட்டி கொடி ஏற்றி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை வாசித்தார்.

பிரமுகர்களும் இந்தியப் பிரஜைகளும் கலந்துக்கொண்ட இந்நகழ்ச்சியில் பல்வேறு இந்திய கலாச்சார நிகழ்ச்சிகளும் மாணவர்கள் படைப்பும் இடம் பெற்றன.









