கோலாலம்பூர்:
இஸ்ரேல் – காஸா போரில் காயமுற்ற 40 பாலஸ்தீன சிவிலியன்களுக்கு மலேசியாவில் சிகிச்சை அளிக்கப்படும்.
இதற்காக அரச மலேசிய ஆகாயப் படையை சேர்ந்த இரண்டு ஏர்பஸ் A-400M விமானங்கள் எகிப்து அல்-மசா ஆகாயப்படை தளத்திற்கு புறப்பட்டன.
காயமுற்ற பாலஸ்தீனர்கள் எகிப்தில் உள்ள பல மருத்துவ மனைகளில் சிகிச்சை ப் பெற்று வருகின்றன ர்.
தீக்காயம், எலும்பு முறிவுகள், பல்வேறு மருத்துவ சிக்கல்களை இவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நோயாளிகளை ஏற்றி வரும் அந்த இரண்டு விமானங்களும் வெள்ளிக்கிழமை காலை மலேசியா வந்தடையும் என்று மலேசியாவுக்கான எகிப்திய தூதர் ராகாய் நசிர் கூறினார்.
இதனிடையே மலேசிய தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
அடையாளம் காணப்பட்டிருக்கும் சில மருத்துவ மனைகளில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.








