1 கோடி ரிங்கிட் போதைப்பொருள் சிக்கியது – கணவன், மனைவி கைது!

கோலாலம்பூர்:

போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த ஒரு கும்பலை ஜோகூர் மாநில போலீஸ் முறியடித்தது.

ஆகஸ்டு 12 ஆம் தேதி ஜோகூர்பாரு மாநகரில் மேற்கொள்ளப்பட்ட மூன்று தனித் தனி சோதனை நடவடிக்கைகளில் கணவன் – மனைவி உட்பட எழுவரை கைது செய்து ஒரு கோடி ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்களை போலீஸ் கைப்பற்றியது என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் எம். குமார் கூறினார்.

கைதானவர்களில் ஐந்து உள்நாட்டு ஆடவர்கள், இரண்டு அந்நிய நாட்டுப் பெண்கள் அடங்குவர். இவர்கள் அனைவரும் 22 முதல் 38 வயதிலானவர்கள் ஆவர் என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here