இளம் பெண்ணிடம் வாலாட்டிய முன்னாள் எம்.பி.!

கோத்தா டாமன்சாரா:

ர் இளம் பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் போலீஸ் புலன்விசாரணை வளையத்திற்குள் சிக்கியிருக்கிறார்.

கோத்தா டாமன்சாராவில் உள்ள ஒரு பாசார் ராயாவில் அந்நபர் 20 வயதிற்குட்பட்ட அந்த இளம் பெண்ணை பாலியில் ரீதியில் துன்புறுத்தும் 18 நிமிட காணொலி தங்களுக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறது என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருல்நிஸாம் ஜாஃபார் கூறினார்.

கடந்த ஆகஸ்டு 6 ஆம் தேதி இரண்டு முறை அந்த பாசார் ராயாவில் அந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைவரிசையை காட்டியிருக்கிறார்.

சந்தேகப் பேர்வழியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஷாருல்நிஸாம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here