FA கிண்ண காற்பந்து இறுதி ஆட்டம்: 85,000 ரசிகர்கள் திரள்வர் என நம்பிக்கை

கோலாலம்பூர்:

ஷா ஆலம், புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் வரும் ஆகஸ்டு 24 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற இருக்கும் 2024 FA கிண்ண காற்பந்து இறுதி ஆட்டத்தைக் காண்பதற்கு கிட்டத்தட்ட 85 ஆயிரம் ரசிகர்கள் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இறுதி ஆட்டத்தில் சிலாங்கூர் அணியும் JDT எனப்படும் ஜோகூர் டாருள் தாஸிம் அணியும் மோதுகின்றன.

இந்த இரண்டு அணிகளின் ரசிகர்களும் மிகப் பெரிய எண்ணிக்கையில் திரள்வதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் மொத்தம் 2,488 உறுப்பினர்கள் கடமையில் அமர்த்தப்படுவர் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ ருஸ்டி முகமட் இசா கூறினார்.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரும் விளையாட்டு முடிந்த பின்னரும் வாகனப் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தும் பணியில் போலீஸ் நேர்த்தியாக ஈடுபடுவர் என்று அவர் குறிப்பிட்டார்.

தடை செய்யப்பட்ட பொருட்களை ரசிகர்கள் அரங்கிற்குள் கொண்டுவருவதை தடுப்பதற்கு அரங்கிற்கு வெளியேயும் உள்ளேயும் பணியில் இருக்கும் போலீஸ்காரர்கள் கடுமையான சோதனையை மேற்கொள்வர் என்று டத்தோ ருஸ்டி சொன்னார்.

அன்றைய தினம் ஏழு சாலைகள் மூடப்படும் என்ற அவர் எல் ஆர் டி ரயில் சேவை நேரத்தை நீட்டிப்பதற்கு பிராசாரனா நிறுவனம் ஒப்புக் கொண்டிருப்பதால் பொது போக்குவரத்தை பயன்படுத்தும்படி போலீஸ் ரசிகர்களை கேட்டுக்கொண்டது.

இதனிடையே JDT அணிக்கு ஆதரவும் உற்சாகமும் தெரிவிப்பதற்கு ஏதுவாக ஆகஸ்டு 25 ஆம் தேதியை ஜோகூர் மாநில அரசாங்கம் பொது விடுமுறையாக அறிவித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here