எல்லை மீண்டும் திறப்பதால் பினாங்கில் ஏப்ரல் 1-ஆம் தேதி ஏழு அனைத்துலக விமானங்கள் தரையிறங்கும் என்று எதிர்பார்ப்பு

ஜார்ஜ் டவுன், மார்ச் 30 :

எதிர்வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி நாட்டின் எல்லை மீண்டும் திறப்பதால், தைவானில் இருந்து இரண்டு உட்பட ஏழு அனைத்துலக விமானங்கள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 1) பினாங்கில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் இருந்து பினாங்குக்கு ஐந்து விமானங்களும், தைவானில் இருந்து இரண்டு விமானங்களும் என பல்வேறு விமான நிறுவனங்கள் வழியாக இந்த விமானங்கள் பினாங்குக்கு வரும் என மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங் பெர்ஹார்ட் தெரிவித்துள்ளது.

ஏர் ஏசியா வடக்கு பிராந்திய (அரசு உறவுகள்) மேலாளர் கென்னத் டான் கூறுகையில், ஏப்ரல் 1 ஆம் தேதி சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்படும் போது, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட சில ஆசிய நாடுகளில் இருந்து அதிக விமானங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

“நாங்கள் ஏப்ரல் 1 முதல் அனைத்துலக இடங்களுக்கு செல்லும் விமானங்களை மீண்டும் தொடங்குவோம்,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here