கோலாலம்பூர்:
போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக 49 வயது பாடகர், பாடலாசிரியர் யாசின் சுலைமானுக்கு Yasin Sulaiman ஷா ஆலம் உயர் நீதிமன்றம் ஆயுள் சிறை தண்டனையும் 16 பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்தது.
மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில் முஹம்மட் யாசின் சுலைமான் Muhammad Yasin Sulaiman என்ற இயற்பெயரைக் கொண்ட யாசின் மானுக்கு நீதிபதி டத்தோ நோர் ஷரிடா அவாங் Datuk Norsharidah Awang தண்டனை தீர்ப்பளித்து தண்டனை விதித்தார்.
யாசின் சுலைமான் இதற்கு முன்னதாக இக்குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார். இதனை எதிர்த்து பிராசிகியுஷன் மேல் முறையீடு செய்ததில் இவ்வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது.