கோலாலம்பூர்:
ஓர் இடைநிலை பள்ளி மாணவியை பாலியல் உறவுக்கு அழைத்து மானபங்கம் செய்ததாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டை ஜோகூர் அரசியல்வாதியின் முன்னாள் சிறப்பு அதிகாரி மறுத்தார்.
ஓர் இடைநிலை பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான 45 வயது ஸைனுர் ஜூமாஹாட் Zainoor Juma’at செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி பயானி முகமட் நோர் Bayani Mohd Nor முன்னிலையில் குற்றச்சாட்டை மறுத்துள்ள விசாரணை கோரினார்.
இந்நபர் அந்த 16 வயது மாணவியிடம் பாலியல் உறவுகொள்ளும் நோக்கத்தில் உடலை தன் கைகளால் தடவினார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
பத்து பஹாட், ஸ்ரீகாடிங்கில் உள்ள புரா கெஞ்சானா நீச்சல் குளத்தில் கடந்த ஜூலை 25 ஆம் தேதி மாலை 6 மணியளவில் அவர் இக்குற்ற செயலைப் புரிந்திருக்கிறார் என்றும் அக்குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரையில் சிறை தண்டணை விதிக்கப்படும்.