பள்ளிகள் வெள்ளத்தில் மூழ்கின; ஆசிரியர்கள், மாணவர்கள் அவதி

கோலாலம்பூர்:

ஷா ஆலம் பாடாங் ஜாவாவில் பல பகுதிகள் திடீர் வெள்ளத்தில் மூழ்கின. பாடாங் ஜாவா தேசிய பள்ளியில் முழங்கால் வரை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

ஆசிரியர்களும் மாணவர்களும் இதனால் பெரும் அவதிக்குள்ளாயினர். வகுப்பறைகளில் வெள்ளம் புகுந்து உடமைகளை சேதப்படுத்தின.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆசிரியர்கள் மிகுந்த சிரத்தையுடன் செயல்பட்டனர்.

வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் உடனடியாக களம் இறங்கும்படி அனைத்து அரசாங்க ஏஜென்சிகளுக்கும் உத்தரவிடப்பட்டது என்று பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் டானியால் அல் ரஷிட் ஹரோன் அமினார் ரஷிட் Danial Al Rashid Haron Aminar Rashid அவரின் சமூக வலைத் தளங்களில் பதிவேட்டில் பதிவிட்டிருக்கிறார்.

பாடாங் ஜாவாவில் மீண்டும் மீண்டும் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுப்பதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here