நாட்டில் இதுவரை 97.7 விழுக்காடு பெரியவர்கள் முழுமையாக கோவிட்-19 தடுப்பூசி போட்டுள்ளனர்

கோலாலம்பூர், ஜனவரி 4 :

நேற்றைய நிலவரப்படி, நாட்டில் உள்ள பெரியவர்கள் மொத்தம் 22,864,655 நபர்கள் அல்லது 97.7 சதவீதம் பேர் தங்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

சுகாதார அமைச்சின் COVIDNOW போர்ட்டலின் அடிப்படையில், 23,155,545 நபர்கள் அல்லது 98.9 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களில் 2,758,498 நபர்கள் அல்லது 87.6 சதவீதம் பேர் முழுமையாக செலுத்திக் கொண்டிருக்கின்றனர், மஅத்தோடு 2,849,786 நபர்கள் அல்லது 90.5 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

நேற்று, மொத்தம் 208,327 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன, அவற்றில் முதல் டோஸாக 2,768 தடுப்பூசிகளும், இரண்டாவது டோஸாக 3,843 தடுப்பூசிகளும் மற்றும் பூஸ்டர் டோஸாக 201,716 தடுப்பூசிகளும் வழங்கப்பட்டன.

இது தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கையை 58,055,878 ஆகக் கொண்டு வந்துள்ளது. இதுவரை வழங்கப்பட்ட பூஸ்டர் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 6,627,119 ஆகவும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here