பொந்தியான், புக்கிட் நானாஸில் ஏழு வாகனங்கள் மோதிய விபத்தில் 18 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கொல்லப்பட்டார். வியாழன் (ஆகஸ்ட் 29) காலை 7.57 மணிக்கு ஜாலான் சினார் ஹரப்பான் பத்து 27 இல் நடந்த இந்த விபத்து குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக பெக்கான் நானாஸ் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கைத் தளபதி பக்தியார் சிக் கூறினார்.
விபத்தில் நான்கு கார்கள் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் சிக்கின. விபத்தின் காரணமாக நான்கு பேர் காயமடைந்தனர். மேலும் இருவர் காயமின்றி தப்பினர். அவர்கள் 18 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள். 18 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களில் ஒருவர் விபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மற்றையவர்கள் அந்தந்த வாகனங்களில் இருந்து பத்திரமாக வெளியேறி, சம்பவ இடத்திலேயே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.








