ஜோகூர்:
ஜோகூர் பாரு, இஸ்கண்டார் புத்ரி ஆகிய இரண்டு பகுதிகளில் ஆகஸ்டு 17 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட நான்கு சோதனை நடவடிக்கைகளில் ஒரு காதல் ஜோடியை கைது செய்து போதைப் பொருளை தயாரித்து அனைத்துலக ரீதியில் விநியோகித்து வந்த ஒரு கும்பலை போலீஸ் முறியடித்திருக்கிறது என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் எம்.குமார் இன்று கூறினார்.
இந்நடவடிக்கையில் கிட்டத்தட்ட 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 6 கிலோ பல்வகையான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
ஜோகூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கமிஷனர் குமார், 31 வயது அந்நிய நாட்டு ஆடவரையும் அவரின் காதலி என்று நம்பப்படும் 38 வயது உள்நாட்டுப் பெண்ணையும் போலீஸ் கைது செய்தது என்று சொன்னார்.