ஆகஸ்டு மாதம் 31-ஆம் நாள், சனிக்கிழமை நாட்டின் 67-ஆவது தேசிய தின நாள் கொண்டாடப்பட இருப்பதை அனைவரும் அறிவோம்.
இதன் தொடர்பில், நாட்டில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் முதல் நாள் ஆகஸ்டு 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாட்டின் சுபிட்சத்திற்காகவும் வளப்பத்திற்காகவும் சிறப்புப் பிரார்த்தனை இடம்பெற வேண்டும் என்று இந்து சங்க தேசியத் தலைவர் ஸ்ரீகாசி-சங்கபூசன் தங்க கணேசன் வலியுறுத்தி உள்ளார்.
மலேசிய இந்து சங்கத்தின் 122 வட்டாரப் பேரவைகளின் பொறுப்பாளர்களும் தத்தம் பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலங்களுடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
நாட்டில் நிலவும் அரசியல் நிலைத்தன்மை, சீரான வளர்ச்சி, பல மக்களும் போற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை ஒவ்வொருவரும் பெருமித உணர்வுடன் கருதுவதுடன் இத்தகைய பெரும்பேற்றுக்காக அனைவரும் குறிப்பாக இந்துப் பெருமக்கள் பரம்பொருளளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
இந்த நிலை தொடரவும் மக்களின் நல்லிணக்கம்- கருத்தொற்றுமை மேலும் வலுப்படவும் நாடு வளம்பெறவும் இந்த 67-ஆம் ஆண்டு மெர்டேக்கா தின வழிபாட்டில் அனைவரும் இறைவனிடம் வேண்டிக் கொள்வோம் என்றும் இந்த வேளையில் மலேசிய இந்து சார்பில் அனைவருக்கும் 67-ஆவது மெர்டேக்கா தின நல்வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்க கணேசன் குறிப்பிட்டுள்ளார்