மக்களை முடக்கிவைத்த ஓராண்டு எம்சிஓ

 

2020, மார்ச் 18 – நாட்டில் கொரோனா உயிர்க்கொல்லி தொற்றுப் பரவல் விஸ்வரூபம் எடுப்பதைத் தடுக்க முதல் முறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (எம்சிஓ) அரசாங்கம் பிறப்பித்தது.

மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினர். பள்ளிகள் மூடப்பட்டன. தொழில்துறைகள், வியாபாரங்கள் அனைத்தும் மூடப்பட்டன. ஒட்டுமொத்த நாடே நிலைகுத்திப்போனது.

2021, மார்ச் 18 – ங்ரியாக ஓராண்டு நிறைவு பெற்றிருக்கும் நிலையில் சற்று பின்னோக்கிப் பார்த்தால், கொரோனா ஏற்படுத்திய பெரும் பாதிப்புகளில் இருந்து விடியற்காலைப் பொழுதில் சூரியனைக் கண்ட பனிபோல் மெல்ல மெல்ல திரை விலகுவதுபோல், மறுவாழ்வு பெற்று வருகிறோம்.

கழுத்தை நெரித்த நிதி இழப்புகள் – பாதிப்புகள் இந்த ஓராண்டுக்குப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மூச்சுவிடும் அளவில் தணிந்து வருகிறது. நிலைமையைச் சமாளித்து கட்டுக்குள் வைத்திருக்கும் மலேசிய அரசாங்கத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.

ஆனால், கொரோனா விட்டுச் சென்றிருக்கும் வடு அவ்வளவு எளிதில் மறைந்துபோகாது. உலகம் அதன் இயல்பு நிலையில் இருந்து விலகித்தான் இருக்கிறது. ஒரு பூரணமான செழிப்பும் வனப்பும் இல்லை.

இதுவெல்லாம் மாற வேண்டும். மக்கள் அவர்களின் வழக்கமான இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும். இதுதான் இன்றைய பிரச்சினையாக இருக்கிறது.

பெரியோர் முதல் சிறியோர் வரை கிட்டத்தட்ட சிறை வாழ்க்கை வாழ்ந்தனர் என்றால் மிகையாகாது. இருப்பினும் கோவிட்-19 பெருந்தொற்று நமக்குக் கற்றுத்தந்த பாடம் மிக வலியது.

வாழ்வியலில் ஒழுக்கநெறிகள், கட்டுப்பாடுகள் அவசியம் – கட்டாயம் என்பதைக் கற்றுக் தந்ததும் கொரோனாதான். முகக்கவசம் இன்றி இன்றளவும் சுதந்திரமாக நடமாட முடிகிறதா? கைத்தூய்மியைப் பயன்படுத்தாத நாள் உண்டா?

குறிப்பிட்ட நேரத்தில் வீடு திரும்பும் சிந்தனையை மீற முடிகிறதா? விருப்பம்போல் நண்பர்களோடு சேர்ந்து அரட்டை அடிக்கவோ, களிப்பில் இருக்கவோ  முடிகிறதா?

எல்லாக் கெட்டப் பழக்கவழக்கங்களுக்கும் திடீர் பிரேக் வைத்ததும் வாழ்க்கையில் ஓர் ஒழுங்கு முறையை ஏற்படுத்தியதும் கொரோனாதானே!

வருமானம் இன்றி பசியால் வாடியவர்களுக்கு எல்லாம் உணவு தர வைத்ததும் இந்த கொரோனாதானே! அதுவரையில் அக்கம் பக்கத்தார் யார் என்று தெரியாமல்கூட வாழ்ந்தவர்கள் பரிவோடும் கருணையுடனும் மனத்தளவில் ஆரத்தழுவிக் கொண்டதும் கொரோனாவால் தானே.

வாகனங்கள் இன்றி தெருக்கள் – ங்ாலைகள் – நெடுஞ்ங்ாலைகள் வெறிச்ங்ோடியதில் வானம் பளிச்ஙெ்ன்று இருந்ததே. மக்கள் நல்ல காற்றைச் சீவாசித்தனரே!
குடும்ப உறவுகளில் அருமையை – பெருமையை உணரவைத்து வலுப்படுத்தியதும் கொரோனாதான். நல்ல நாள், பெருநாள், இறப்பு போன்ற துக்க நாளில் ங்ந்திக்க முடியாமல் பரிதவித்த காலங்களில் அந்த உறவுகளின் உன்னதத்தைக் கண்ணீரால் தெளிய வைத்ததும் கொரோனாதான்.

அடுத்த தலைமுறைக்கு மாசற்ற இயற்கையை விட்டுச் ஙெ்ல்ல வேண்டும் என்ற பாடத்தையும் கொரோனா கற்றுத் தந்திருக்கிறது. சுற்றுச்சுழலை நேசிப்பதற்கும் மனிதர்கள் கற்றுக் கொண்டனர். காலை – மாலை நேர நடைபயின்று தூய காற்றைச் சுவாசிக்க முடியாமல் போனபோது அதன் அருமை புரிந்தது.

இயற்கைக்கும் செடி-கொடிகள், மரங்களுக்கும் கேடு நினைக்கக் கூடாது. விருப்பத்திற்கு வெட்டித் தள்ளக்கூடாது என்பதை தலையில் அடித்து உணர வைத்ததும் இந்த கொரோனாதான்.

சுற்றுச்சூழல் போன்றவற்றுக்கும் தீங்கு இழைக்கலாகாது என்பதை மிகப் பெரிய விலை கொடுத்துதான் தெரிந்துகொண்டோம்.

இன்றும் சரி, இனி என்றும் சரி அக்கறையற்ற – கவனம் இல்லாத வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க மாட்டோம். பசியின் வலியை மறவோம் என்ற சபதம் எடுக்க வைத்ததும் இந்த கொரோனாதான்.

ஓராண்டு எம்சிஓ காலகட்டத்தில் நமது பயணங்களை இழந்தோம், சுற்றுப்பயணங்களைப் பறிகொடுத்தோம், குடும்ப – நட்பு வட்டங்களின் ஒன்றுகூடலை மறந்தோம். நம் வாழ்க்கையில் ஒட்டி உறவாடிய பல மகிழ்ச்சிகளைத் தொலைத்தோம். இனியும் வேண்டாமே  இப்படி ஒரு துன்பம்.
பாதுகாப்பாக இருப்போம், உடல் ஆரோக்கியத்தைப் பேணுவோம்.
– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here