இந்தியாவில் பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறோம்: பிரதமர் மோடி

சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்து பேசினார். பின்னர் சிங்கப்பூர் பிரதமருடனான உயர்மட்டக் குழுவுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-எனக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த சிங்கப்பூரு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 4ஜி என்று சொல்லப்படும் பிரதமர் மற்றும் அவரது அமைச்சர்கள் தலைமையின் கீழ், சிங்கப்பூர் மேலும் வளர்ச்சி பெறும். சிங்கப்பூர் வெறும் நாடு மட்டும் இல்லை.

வளர்ந்து வரும் ஒவ்வொரு நாடுகளுக்கும் ஊக்கமளிக்கும் சக்தியாகவும் சிங்கப்பூர் உள்ளது. இந்தியாவிலும் பல சிங்கப்பூர்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். இதற்காக இரு தரப்பும் இணைந்து பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்றார்.சிங்கப்பூர் பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு இந்தியா – சிங்கப்பூர் இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. செமி கண்டக்டர்,டிஜிட்டல் டெக்னாலஜி,ஸ்கில் டெவலப்மெண்ட் உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here