கோலாலம்பூர்:
சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில்
மலேசியாவிற்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார் நூர் ஷஸ்ரின் முகமட் லத்திப்.
இவர் மகளிர் பிரிவுகான பாய்மரப்படகு போட்டியில் வென்று, மலேசியாவிற்கு பெருமை சேர்த்திருக்கின்றார்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஜாகர்த்தாவில் நடைபெற்ற போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
























