கோலாலம்பூர்:
மலேசிய ஏர்லைன்ஸ் இன்னமும் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர் நோக்கியுள்ளது. இருப்பினும் ஒரு பாதுகாப்பான விமான நிறுவனமாகவே மலேசிய ஏர்லைன்ஸ் திகழ்கிறது என்று மலேசிய விமான போக்குவரத்து குழுமம் கூறியது.
தொழிலாளர் பற்றாக்குறையை ஒப்புக்கொண்ட குழுமத்தின் நிர்வாக இயக்குனர் கேப்டன் டத்தோ இஸாம் இஸமாயில் நாம் மட்டும் அல்லாது மற்ற விமான நிறுவனங்களும் இப்பிரச்னையை எதிர்நோக்கியுள்ளன என்றார்.
ஆள் பற்றாக்குறை என்பது ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது. இந்நிலை முழுமையாக முற்றுபெறாது என்று இன்று மிட்டெக்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.