பட்டர்வொர்த்:
செபெராங் பிறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு திறக்கப்பட்ட தற்காலிக வெளியேற்ற மையங்களின் எண்ணிக்கை 7ல் இருந்து 11 ஆக அதிகரித்துள்ளது.
பினாங்கு பேரிடர் மேலாண்மைக் குழு செயலகத்தின் அறிக்கையின் அடிப்படையில் இன்று காலை 7.30 நிலவரப்படி, சம்பந்தப்பட்ட அனைத்து நிவாரண மையங்களிலும் மொத்தம் 342 குடும்பங்களைச் சேர்ந்த 2,039 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கனமழையை தொடர்ந்து கெடாவின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சுமார் 6 மாவட்டங்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அது மேலும் குறிப்பிட்டுள்ளது.


















