எம்.எஸ்.சுப்புலட்சுமி தோற்றத்தில் அசத்திய வித்யா பாலன்

பாரத் ரத்னா விருது பெற்ற கர்நாடக இசை பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு சினிமா ஆகிறது என்றும், அதில் வித்யா பாலன் எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், வித்யா பாலன் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தோற்றத்தில் நடத்தி உள்ள போட்டோ ஷூட் பரபரப்பை கிளப்பி உள்ளது.

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதி இந்த போட்டோ ஷூட்டை நடத்தி உள்ளார். இது குறித்து வித்யா பாலன் கூறும்போது, “என் அம்மா காலையில் முதலில் பாடும் சுப்ரபாதம் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடியது. அவருடைய குரலில்தான் எனது பொழுதுவிடியும். என்னைப் பொறுத்தவரை எம்.எஸ்.சுப்புலட்சுமி ஒரு ஆன்மிக அனுபவம். எனவே, இது அன்பின் உழைப்பு, இந்த வழியில் அவருக்கு அஞ்சலி செலுத்த முடிந்ததை நான் பெருமையாக உணர்கிறேன்”. என்கிறார்.

இந்த முயற்சிக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேத்தி சிக்கில் மாலா உதவி உள்ளார். எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்ந்த இடத்தில் அவர் அணியும் பட்டுப்புடவைகள், நகைகளை கொண்டு இந்த போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here