இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம்

பிரபல பின்னணி பாடகி சுசித்ரா. தனது ஸ்டைலான குரலில் ரசிகர்களை கவர்ந்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் திரைப்பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் அவரது எக்ஸ் தளத்தில் இருந்து வெளியாகின.

இந்த போட்டோக்களை நான் வெளியிடவில்லை என சுசித்ரா தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் இந்த நிகழ்வுக்கு பின் அவரது ஒட்டுமொத்த சினிமா கேரியரே நின்று போனது. திருமண வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்தது. மேலும் திரைப்பிரபலங்கள் பற்றியும் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை அவ்வப்போது கூறி வந்தார்.

சில ஆண்டுகாலம் அமைதியாக இருந்தவர் தற்போது மீண்டும் திரைப்பிரபலங்கள் பற்றி பேசி தொடங்கி உள்ளார். குறிப்பாக பாடலாசிரியர் வைரமுத்து பற்றி சமீபத்தில் இவர் பேசியது, பேன்டின் சாம்பூ ஆகியவை வைரலாகி டிரெண்ட் ஆனது. மேலும் அதே பேட்டியில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மறைந்த இயக்குனர் கே பாலசந்தர் பற்றி பேசும்போது, அவர் ஒரு லஸ்டி மேன். சாகும் வரை அப்படி தான் இருந்தார். இவரை மாதிரியான ஆட்கள் எல்லாம் அப்படி தான் இருப்பார்கள் என தெரிவித்தார்.

சுசித்ராவின் இந்த கருத்து சர்ச்சையாகி உள்ளது. ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான் நடிகர்களை தந்த பாலசந்தரை பற்றி இப்படியா பேசுவது என அவருக்கு எதிர்ப்பு குரல்கள் எழ துவங்கி உள்ளன. இந்நிலையில் சுசித்ராவிற்கு தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் லியாகத் அலிகான் வெளியிட்ட அறிக்கை : செத்துப் போனவர்கள் சாமிக்கு சமம். அவர்களது குற்றம் குறைகளை விமர்சிக்காமல் தவிர்ப்பது ஒரு நாகரிகமான ஒழுக்கம். திரையுலகின் பெருமைக்குரிய ஒரு சாதனையாளரை குறை கூறி கொச்சைப்படுத்தி இருப்பது அநாகரிகத்தின் உச்சம்.

இது அவரது குடும்பத்தார்க்கு எவ்வளவு கொடிய வேதனை? தமிழ் திரையுலகிற்கு பெருமைகள் சேர்த்து, விருதுகள் பல வாங்கி, இளம் இயக்குநர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த பாலச்சந்தர் சாரை விமர்சித்த பாடகி சுசித்ராவை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது” என குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here