நாளை வங்காளதேச தேர்தல்; அங்கு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

புத்ரா ஜெயா:

நாளை (ஜனவரி 7, 2024) வங்காளதேச பொதுத் தேர்தல் நடைபெறுவதால், அசம்பாவிதங்களை தவிர்க்க அங்கு தேவையற்ற பயணத்தைத் தவிர்க்குமாறு வெளியுறவு அமைச்சகம் (விஸ்மா புத்ரா) மலேசியர்களுக்கு அறிவுறுத்துகிறது.

வங்காளதேசத்தில் வசிக்கும் மலேசியர்கள் விழிப்புடன் இருக்கவும், அரசியல் கூட்டங்களைத் தவிர்க்குமாறும் அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் டாக்காவில் உள்ள மலேசிய தூதரகத்தின் மூலம் வங்காளதேசத்தில் நடைபெறும் அதன் 12வது பொதுத் தேர்தல் தொடர்பான முன்னேற்றங்களை அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்றும் அது அவ்வறிக்கையில் கூறியுள்ளது.

தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்கள் டாக்காவில் உள்ள மலேசிய தூதரகத்தை எண் 19, சாலை எண் 6, பரிதாரா டிப்ளோமாடிக் என்க்ளேவ், டாக்கா-1212 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் , அல்லது தொலைபேசி மூலம்: +88 0241081892/1895 மற்றும் அவசரநிலைகளுக்கு +88 018 4179 8077 அல்லது மின்னஞ்சல் mwdhaka@kln.gov.my வழியாக தொடர்பு கொள்ளலாம் எனவும் அது தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here