குஜராத்தில் 6 வயது சிறுமி பாலியல் சித்ரவதை செய்து கொலை; தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

ஆமதாபாத்:

குஜராத் மாநிலம் தோஹத் மாவட்டம் பிபலியா ஆரம்பப்பள்ளியில் 1ம் வகுப்பு மாணவியை துன்புறுத்தி கொலை செய்த பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ராஜ்தீப் சிங் ஜாலா கூறுகையில், ”6 வயது பள்ளி மாணவியின் உடல் கடந்த வியாழன் அன்று, மாலையில் பள்ளி வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார், 10 பேர் கொண்டு குழு அமைத்து கொலைக்கான ஆதாரத்தை திரட்டினர்,” என்றார்.

மாணவியின் தாய் கூறுகையில், ”எனது மகளை, தலைமை ஆசிரியர் கோவிந்த நத், தினமும் காரில் அழைத்து செல்வார். அன்று காலையில் 10.20 மணிக்கு அவர், எனது மகளை வீட்டிலிருந்து அழைந்து செல்ல வந்தார். நான் அவளை காருக்கு அழைத்து சென்று ஏற்றிவிட்டேன் . ஆனால், எனது மகள் பள்ளிக்கு சென்றடையவில்லை. இதை பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிபடுத்தி உள்ளனர்.

”பள்ளிக்கு அழைத்து சென்ற தலைமையாசிரியர், வழியில் எனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அதனால் அந்த சிறுமி, எதிர்ப்பு தெரிவித்து அடித்துள்ளாள். அதில் அதிர்ந்த போன அந்த தலைமையாசிரியர் அடிப்பதை நிறுத்த முயற்சித்துள்ளார்.

”மாலை 5 மணிக்கு பள்ளிக்கு வரும் போது, காரிலேயே அந்த சிறுமியை கொலை செய்துவிட்டு உடலை பள்ளி கட்டிடத்தின் பின்புறம் உள்ள தோட்டத்தில் புதைத்து விட்டார். அவளுடைய புத்தக பை மற்றும் ஷூக்கள் வகுப்பறைக்கு வெளியே கிடந்தது. முதலில் மறுத்த அவர், நாங்கள் துருவி, துருவி கேள்வி கேட்ட போது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்,” என்று கண்ணீர் மல்க கூறினார்.

கல்வித்துறை அமைச்சர் குபேர் தின்டோர் கூறியதாவது: இது மாதிரி சம்பவங்கள் சமூகத்தில் தொடர்ந்து நடைபெறுகிறது. இச்சம்பவம் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

விரைவில் விசாரணை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தோம். 3 நாட்களில் குற்றவாளியை கண்டுபிடித்து, தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இம்மாதிரியான சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இனிமேல் இது போன்ற குற்றச்சம்பவங்கள், திரும்பவும் நடைபெறக்கூடாது. அதற்கான தேவையான நடவடிக்கை எடுப்போம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here