கோலாலம்பூர்:
புக்கிட் அமானை சேர்ந்த வணிக குற்றப்புலன் விசாரணை இலாகா இங்கிலாந்தை சேர்ந்த Pantheon Ventures எனும் நிறுவனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி பெரிய அளவிலான முதலீட்டு மோசடியில் ஈடுபட்ட 17 பேரை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 23 லிருந்து 52 வயதிற்குட்பட்ட ஒரு நிறுவனத்தின் இயக்குனர், செயலாளர் ஆகியோருடன் இந்த மோசடிக் கும்பலுக்காக வங்கி கணக்குகளை திறந்து சட்டரோத வழியிலான பணத்தை கைமாற்றி வந்த ஏஜெண்டுகளும் அடங்குவர்.
இவ்வருடம் ஜனவரி தொடங்கி தற்போது வரை 32.9 மில்லியன் ரிங்கிட்டை இவர்கள் மோசடி செய்துள்ளனர்.
இணையத்தள விளம்பரங்களின் வாயிலாக 400 விழுக்காடு வரை லாப ஈவு கொடுக்கப்படுவதாக கூறப்படும் போலியான விளம்பரங்களை நம்பி பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை இழந்துள்ளனர்.
இதன் தொடர்பில் விசாரணை நடந்து வரும் அதே வேளையில், போலீஸ் மேலும் எழுவரை தேடி வருகிறது.









