கோத்தா திங்கி:
கோத்தா திங்கியில் உள்ள ஓராங் அஸ்லி பாசிர் இந்தான் கிராமத்தில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐவர் கோத்தா திங்கி செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று காலை நிறுத்தப்பட்டனர்.
23 முதல் 52 வயதிற்குட்பட்ட மூவர் கீழறுப்பு செய்ததாக பீனல் கோட் பிரிவு 124 K கீழ் குற்றச்சாட்டுகளை எதிர் நோக்கினர் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ எம்.குமார் கூறினார்.
41 மேலும் 53 வயதிலான மற்ற இருவர் ஸ்ரீ ஆலாமில் உள்ள ஒரு தொழிற்சாலையின் ஓர் இயக்குனரும் ஒரு பங்குதாரரும் ஆவர் என்று குறிப்பிட்ட அவர், இச்செயலுக்கு துணை போனதாக குற்றம் சுமத்தப்பட்டது என்றார்.