நம்பர் ஒன் ஸ்கூல் ஆகும் ஆசையில் 2 ஆம் வகுப்பு மாணவனை நரபலி கொடுத்த பள்ளி நிர்வாகம்

உத்தரப் பிரதேசம்: பள்ளியின் வளர்ச்சி மற்றும் புகழுக்காக 2 ஆம் வகுப்பு மாணவனை நிர்வாகமே நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. DL பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளியின் இயக்குநர், பிரின்சிபல் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஐவர் பிளாக் மேஜிக் உள்ளிட்ட மூட நம்பிக்கை சடங்குகளில் தீவிரமாக நம்பிக்கை கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. சிறுவனை நரபலிகொடுத்தால் தங்களின் பள்ளியின் பிஸ்னஸ் வளர்ச்சி அடையும் என்றும் புகழ் கிடைக்கும் நம்பியுள்ளனர்.

எனவே பள்ளியின் விடுதியில் தங்கி பயின்று வந்த 11 வயதாகும் இரண்டாம் வகுப்பு மாணவனை கடவுளுக்கு நரபலிகொடுக்கத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே ஒரு முறை அதற்கு முயன்று தோற்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பலி கொடுக்க தேர்ந்தெடுத்த சிறுவனை ஐவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். சிறுவனின் உடலை பள்ளி இயக்குநர் தனது காரில் மறைத்து வைத்துள்ளார். கடந்த திங்கள்கிழமை முதல் சிறுவனை காணவில்லை என பாடம் எடுக்கும் ஆசியரியர் தேடிய நிலையில் விவகாரம் போலீசுக்கு சென்றுள்ளது.

போலீஸார் நடத்திய சோதனையில் பள்ளி இயக்குநரின் காரில் கழுத்தில் காயங்களுடன் சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் சிறுவன் பலி கொடுக்கப்பட்ட உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பள்ளி இயக்குநர் உள்ளிட்ட ஐவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இது குறித்து பள்ளியில் ஆசிரியர்கள் உள்ளிட்ட வேறு யாரும் முன்னரே தெரிந்து வைத்திருந்தனரா என்றும் விசாரித்து வருகின்றனர். அடிப்படை உரிமையான கல்வி லாபம் கொழிக்கும் வியாபாரமாக மாறி வருவதன் உச்சமே இந்த கொலை என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here