(எம்.எஸ்.மணியும்)
சிப்பாங்,
ஒரே நேரத்தில் 14 விமானங்கள் பழுது நீக்கம், பராமரிப்பு, முழு சோதனைக்கு உட்படுத்துவது போன்ற வசதிகளை கொண்டிருக்கும் ஏடிஈ எனப்படும் ஆசிய டிஜிட்டல் இன்ஜினியரிங் நிறுவனம் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
விமானம் பழுது நீக்கம் செய்யும் மலேசியாவில் மிகப் பெரிய வசதியை கொண்டிருக்கும் முதல் நிறுவனமாக திகழும் ஆசியா டிஜிட்டல் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு வருகை புரிந்த மலேசிய சாதனை புத்தக அமைப்பின் அதிகாரிகள் ஏடிஈ நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடம் மலேசிய சாதனை புத்தக சான்றிதழை வழங்கினர்.
ஆசியா டிஜிட்டல் இன்ஜினியரிங் நிறுவனம் என்பது கெப்பிட்டல் ஏ நிறுவனத்தின் கீழ் வரும் ஒரு துணை நிறுவனமாகும். கெப்பிட்டல் ஏ நிறுவனத்தின் கீழ் தற்போது ஏர் ஆசியா விமான நிறுவனம், பிக் பே, ஆசியா ரைட். சந்தான் போன்ற நிறுவனங்களோடு ஆசியா டிஜிட்டல் இன்ஜினியரிங் நிறுவனமும் இயங்கி வருகிறது. கெப்பிட்டல் ஏ குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக தற்போது டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் பொறுப்பு வகித்து வருகிறார்.
கெப்பிட்டல் ஏ குழுமத்தின் கீழ் இயங்கும் அனைத்து ஏர் ஆசியா விமானங்களும் முழு சோதனைக்காகவும், மறுசீரமைப்பிற்காவும் இது நாள் வரை சிங்கப்பூர், சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. அதன்படி மேற்கண்ட சோதனைக்கும் மறுசீரமைப்பிற்கும் ஏற்படும் செலவு ஒரு விமானத்திற்கு கிட்டத்தட்ட பத்து லட்சம் ரிங்கிட் முதல் நாற்பது லட்சம் ரிங்கிட் வரை பிடிக்கும் என்று நமது சந்திப்பில் விவரித்தார் மகேஷ்குமார்.