கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) 57ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் செவ்வாய்கிழமை (அக் 1) வாழ்த்து தெரிவித்தார். முகநூல் பதிவில், நாட்டில் ஊழலை ஒழிப்பதில் ஆணையம் தனது அசைக்க முடியாத முயற்சிகளையும் அர்ப்பணிப்பையும் தொடரும் என்று அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.
MACC அதன் நிறுவன ஆண்டு விழாவை செவ்வாய்க் கிழமை கொண்டாடுகிறது. அக்டோபர் 1, 1967 இல் உருவாக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு முகமைக்கு (ACA) மாற்றாக ஆணையம் நிறுவப்பட்டது.