நில வரி செலுத்தாதவர்களின் காணிகளை கையகப்படுத்துகிறது பகாங் மாநில அரசு

குவாந்தான்:

நில உரிமையாளர்கள் வரி செலுத்தாததைத் தொடர்ந்து 1,082 நிலங்களை பகாங் மாநில அரசு கையகப்படுத்தியது.

இந்த நிலத்தை கைப்பற்றும் நடவடிக்கை செயல்படுத்தப்படுவதற்கு முன்பு, நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என்று, பகாங் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் இதனை கூறினார்.

மேலும் இந்தாண்டு இதுவரை, பகாங் மாநிலம் முழுவதும் 1,082 நில உரிமைகள் நில நிர்வாகிகளால் ரத்து செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் நில உரிமையாளர்க்லிடமிருந்து வசூலிக்கப்பட்ட மொத்த அபராத வருவாய் 1.4 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாகும் என்று,இன்று குவாந்தனில் உள்ள விஸ்மா ஸ்ரீ பகாங்கில் நடந்த பகாங் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here