கோலாலம்பூர்:
வரும் நவம்பர் மாதம் தொடங்கும் பருவமழை காலகட்டத்தில் நாட்டின் பல மாநிலங்களில், குறிப்பாக கிழக்குக் கரை மாநிலங்களில் 4 முதல் 6 பிரிவுகளிலான கன மழை பெய்யும்.
நவம்பர் மாதம் தொடங்கும் பருவமழை காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் நீடிக்கும். தென் கிழக்கு பருவக்காற்று வீசும் இந்த காலகட்டத்தில் மழை வரத்து நாட்டின் பல பகுதிகளில் அதிகரிக்கும். குறிப்பாக கிழக்குக் கரை மாநிலங்களான கிளந்தான், திரெங்கானு, பகாங் மாநிலங்களில் நவம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையில் ஆறு கட்டங்களாக கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது.
டிசம்பர் தொடங்கி ஜனவரி மாதம் வரையில் ஜோகூர், ச பா, சரவாக் மாநிலங்களில் கனத்த மழை பெய்யும் என்று மலேசிய வானிலைத் துறையின் துணை இயக்குநர் அம்புன் டிண்டாங் தெரிவித்தார்.
இந்தக் காலகட்டத்தில் மேற்கு கரை மாநிலங்களில் தொடர்ச்சியாக அடை மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.









