ஜோகூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு நிலம் ஒதுக்குவது தொடர்பில் புதிய யோசனை

ஜோகூர்:

மிழ்ப் பள்ளிகளுக்கு நிலம் ஒதுக்குவதில் பேராக் மாநிலத்தை உதாரணமாகக் கொண்டு, ஜோகூர் அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று ஜோகூர் தமிழ்ப் பள்ளிகள் ஆட்சிமன்றக் குழு கேட்டுக்கொண்டு உள்ளது.

அந்தக் குழு அண்மையில் தனது ஆண்டுக் கூட்டத்தை நடத்தியது.

தமிழ்ப் பள்ளிகள் போதுமான அளவு நிதி ஆதரவைப் பெற இதரக் குழுக்களுடன் இணைந்து தமது குழு பணியாற்றும் என்று குழுவின் தலைவர் சி முனியாண்டி தெரிவித்தத அவர், தமிழ்ப் பள்ளிகளுக்குத் தேயிலைத் தோட்ட நிலங்களை பேராக் அரசாங்கம் ஒதுக்கியது. அதை ஜோகூர் அரசாங்கமும் பின்பற்றுவது சிறந்ததாக இருக்கும் என்றார் அவர்.

மேலும், அத்தகைய நிலத்தை சிறப்புக் குழு நிர்வகிக்க முடியும் என்றும் நிலத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் தமிழ்ப் பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் பயன்படக்கூடும் என்றும் முனியாண்டி கூறினார்.

இதற்கிடையே, இவ்வாரத் தொடக்கத்தில் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜோகூர் மாநில மந்திரி பெசார் ஒன் ஹஃபிஸ் காஸி, குறைவான மாணவர்கள் காரணமாக கிராமப்புறத்தில் இருந்த இரு தமிழ்ப் பள்ளிகள் நகர வட்டாரங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.

SJKT லாடாங் செம்ப்ரோங், SJKT லாடாங் மடோஸ் ஆகியவை அந்த இரு பள்ளிகள் என்றும் அவர் பெயர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here