வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – 3 பேரை தேடும் போலீசார்

 பேராக் பந்தாய்  ரெமிஸ், தாமான் பிந்தாங்கில் நேற்று காலை ஒரு வீட்டின் மீது வட்டி முதலைகளிடம் வேலை செய்யப்படுவர்கள் என நம்பப்படும் மூவர்  பெட்ரோல் குண்டுகளை வீசியதற்காக போலீசாரால் தேடப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அதிகாலை 3.08 மணியளவில் நடந்ததாகவும், ஒன்பது பெட்ரோல் குண்டுகள் வீட்டின் மீது வீசப்பட்டதாகவும், இதனால் ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததாகவும் மஞ்சோங் காவல்துறைத் தலைவர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

குவாரி நிறுவனத்தில் பணிபுரியும் பாதிக்கப்பட்ட 25 வயது ஆடவரிடம் இருந்து காலை 9.36 மணிக்கு காவல்துறைக்கு புகார் கிடைத்ததாக அவர் கூறினார். முதற்கட்ட விசாரணையில் மூன்று சந்தேக நபர்களும் Toyota Altis காரில் சவாரி செய்ததும் முகக்கவசம் அணிந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு வெளியே சீன மொழியில் எழுதப்பட்ட செய்திகள் அடங்கிய ஐந்து தாள்கள் கிடைத்ததாகவும், கடனைத் தீர்க்குமாறு எச்சரித்ததாகவும் ஹஸ்புல்லா கூறினார். இருப்பினும், பாதிக்கப்பட்டவர், எந்தவொரு உரிமம் பெறாத கடனாளியிடமிருந்தும் கடன் பெறவில்லை என்று அவர் கூறினார். குற்றவியல் சட்டம் பிரிவு 435இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் முன் வந்து விசாரணை அதிகாரி அமீர் ஹபீஸ் ரோஸ்லியை 011-24057360 என்ற எண்ணிலோ அல்லது மஞ்சோங் காவல்துறை தலைமையகத்தை 05-6886222 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு ஹஸ்புல்லா கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here