காபா, பள்ளிவாசல் உருவப் படங்களைக் கொண்ட கால் மிதியடிகளை விற்ற குற்றத்தின் அடிப்படையிலான விசாரணைக்கு உதவ இரண்டு ஆடவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
பினாங்கு, ஜோர்ஜ்டவுனில் விற்பனைச் சந்தை முகாம் ஒன்றில் அந்தக் குற்றத்தைப் புரிந்ததன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை அவர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர் என்று பினாங்கு மாநில காவல்துறை இடைக்காலத் தலைவர், டத்தோ முகமட் அல்வி ஜைனால் அபிடின் தெரிவித்தார்.
ஆடவர் ஒருவர் புகார் செய்ததைத் தொடர்ந்து 26 மற்றும் 41 வயதிற்குட்பட்ட அந்த இரு ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட உருவப் படத்தைக் கொண்ட கால் மிதியடியை வாங்கிய ஆடவர்தான் அந்தப் புகாரைச் செய்ததாக அறியப்படுகிறது.1955ம் ஆண்டின் சிறு குற்றச்ஙெ்யல் சட்டத்தின் 14வது பிரிவின் கீழ் அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பில் அனுமானங்களை வெளியிட வேண்டாம் என்றும் காவல்துறை விசாரணை முறையாக நடைபெற இடையூறு செய்யாதிருக்குமாறும் பொதுமக்களுக்கு முகமட் அல்வி அறிவுறுத்தினார்.








