நேருக்கு நேர் பகடி செய்துகொண்ட காலத்தைத் தாண்டிஇப்பொழுது இணையதள பகடிவதைச் சம்பவங்களேஅதிகமாக இருக்கின்றன

குண்டர் கும்பல் தொடக்கங்களையும் இந்தப் பகடிவதைச்சம்பவங்கள் உருவாக்கி விடுகின்றன சமூக வலைத்தளச்சீர்கேடுகள் பெரிய சமூக நோயாக மாறி, நாகரிகமான சமூகச் சூழலை நாசப்படுத்திவிடும் டத்தோஸ்ரீதெய்வீகன் ஆறுமுகம் அவர்களுடன் மக்கள் ஒசைநேர்காணல்

இந்த நவீன உலகத்தில் சமூக வலைத்தளங்கள் மனிதவாழ்வாதாரத்தின் ஓர் அங்கமாகிவிட்டது. ஆக்கப்பூர்வமானசெயல்பாடுகளுக்கு வித்திடுகிறது இணையம். சிலரின்எதிர்மறையான செயல்களால் பல்வேறு சிக்கல்களையும் தனிநபர் மட்டுமன்றி உலகளவில் பல்வேறு தரப்பினரும்எதிர்நோக்குகின்றனர். அது பார்ப்பதற்கு சாதாரணமாகத்தெரிந்தாலும் பூதாகரமான பின் விளைவுகளை வழங்குவதுபகடிவதைச் செயல்கள்தாம் எனக் கூறுகிறார் பிணங்கு மாநிலகாவல்துறை முன்னாள் தலைவரும் மலேசிய குற்றத்தடுப்புஅறவாரியத்தின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவருமானடத்தோஸ்ரீ தெய்வீகன் ஆறுமுகம்.

உயிர்ப்பலி வரையில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்பகடிவதைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மலேசியதொடர்பு பல்லூடக ஆணையம் தொடர் முயற்சிகளைமேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்கதைதவிர்ப்பதற்கும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும்மாணவர்கள், இளைஞர்களிடையே இணையப் பகடிவதைத்தீமையை எடுத்துரைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள், பிரச்சாரங்களை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண மக்கள் ஓசையும்முனைப்புக்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் மலேசியதொடர்பு பல்லூடக ஆணையத்துடன் இணைந்து இது சார்ந்தபல்வேறு தகவல்களையும் நேர்காணல்களையும் மக்கள் ஓசைநாளிதழ் வாயிலாகவும் வலைத்தளங்கள் வாயிலாகவும்வெளியிட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக டத்தோஸ்ரீதெய்வீகன் அவர்களுடன் இதுகுறித்து நேர்காணலைஅலுவலகத்தில் மேற்கொண்டது மக்கள் ஓசை.

சைபர் புல்லிங் எனப்படும் பகடிவதை என்பது புதிய ஒன்றுஅல்ல. 1,600 ஆம் ஆண்டுகளிலிருந்தே இருந்திருக்கின்றது. இணையதள பகடிவதை என்பது இப்பொழுது இணையம்உருவான பிறகு எழுந்த ஒரு பிரச்சினையாக இருக்கிறது.

பகடிவதை என்பது உலகளாவிய பிரச்சினை. படித்தவர்கள்கூட இதனைச் செய்கின்றனர். இதன் ஆரம்பம்பெரும்பாலும் மாணவர்களிடத்தில் காணப்பட்டது என்றும்சொல்லலாம். குறிப்பாக ஆரம்பப்பள்ளிகளிலேயே இதைச்சிறிய, யதார்த்தமான ஒன்றாக கேலி அளவில் செய்து வந்தனர். அது இன்றும் இருக்கிறது. விளையாட்டாக ஆரம்பிக்கப்பட்டபகடி எனும் செயல் இப்பொழுது வதை எனும் ஒன்றுடன்கலந்து சகித்துக்கொள்ள முடியாத அசம்பாவிதங்களைஏற்படுத்திவிடுகிறது என்றார் அவர்.

என் அனுபவத்தில் இடைநிலைப்பள்ளியின் பகடிவதைப்பிரச்சினைகளை கையாண்டதுண்டு. ஒரு மாணவரைத்தாக்கும்அல்லது பகடிவதை இழைக்கும் நோக்கில் தாம் மட்டும்சமாளிக்க இயலாது எனும் காரணங்களுடன் ஒரு கும்பலையும்(கேங்) இணைத்துக்கொண்டு அதில் ஈடுபடுவர். இப்படியாகக்குண்டர் கும்பல் தொடக்கங்களையும் இந்தப் பகடிவதைச்சம்பவங்கள் உருவாக்கி விடுகின்றன. இது சம்பந்தப்பட்டுநிறைய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

நேருக்கு நேர் பகடி செய்து கொண்ட காலத்தைத் தாண்டிஇப்பொழுது இணைய பகடிவதைச் சம்பவங்களே அதிகமாகஇருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் தனிப்பட்டபிரச்சினைகளுக்காக ஒருவரை ஒருவர் சாடுதல், தகாதவார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டி, தாக்கி வெளியிடும்காணொளி அல்லது குரல் பதிவு சம்பவங்களைப்பொறுத்தவரை மற்ற இனத்தவருடன் ஒப்பிடுகையில்இந்தியர்களே அதில் அதிகமாக ஈடுபடுகின்றனர் என்பதைஅறிய முடிகிறது. அதில் உயிர்ப்பலி, தற்கொலை முயற்சி, தற்கொலைச் சம்பவங்களும் நிகழ்ந்து விடுகின்றன எனவும்தெய்வீகன் குறிப்பிட்டார்.

அதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் ஒருபுறம் என்றால்அவர்கள் வெளியிடும் பதிவுகளை ஆதரிப்பது, உடன் சாடுவது, பகிர்வது, பார்ப்பது என இன்னொரு பக்கம் சமுதாயத்தில்உள்ள ஒரு தரப்பினரும் தவறுக்கு உடந்தையாகின்றனர்.

நேரடியாகவோ இணையம் வாயிலாகவோ பகடிவதைக்குஆளாகுபவர்கள் உச்சகட்ட மன உளைச்சல்வரைகாத்திருக்காமல் உடனடியாக ஆலோசனை உதவியைநாடுகிறார்களோ அந்த அளவிற்கு அதற்கான தீர்வைஏற்படுத்தலாம். அவர்களின் நிலை அறிந்து தகுந்தஆலோசனையை வழங்க வேண்டும் என்பதை ஆலோசனைவழங்கும் தரப்பும் கருத்தில் கொண்டு சரியாக அதனைச்செய்ய வேண்டும். இதன் மூலம் அசம்பாவிதங்களைத் தடுக்கும்அதேவேளையில் நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு அமையும். மேலும் இதுபோன்ற சம்பவங்களில் யாரை அணுக வேண்டும், அடுத்து என்ன செய்ய வேண்டும், எவ்வாறு புகார் செய்வதுபோன்ற கல்வியும் விழிப்புணர்வும் தேவையாக இருக்கிறதுஎனவும் அவர் கருத்துரைத்தார்.

அரசைப் பொறுத்தவரை உளவியல் பிரிவு என்று ஒன்றுஉள்ளது. பொதுவாக ஒரு சமுதாயம் எப்படிப்போய்க்கொண்டிருக்கிறது, அவர்களுடைய சிந்தனைகள்என்ன போன்ற ஆய்வுகளை அதில் மேற்கொள்வதுண்டு. அப்படி பார்க்கும்பொழுது நாம் ஒட்டுமொத்தமாககீழ்நிலைக்குப் போக வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்தவேண்டும். ஒருசமுதாயத்தின் நிலைத்தன்மையை மதிப்பிடுவதற்கு சமூகவலைத்தளங்களும் பங்கு வகிக்கின்றன என்பதை உணர்ந்துஅதன் பயனீட்டாளர்களான நாம் செயல்பட வேண்டும்.

இணையத்தை நாகரிகமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்தவேண்டும். தன்னை வளர்த்துக்கொள்ள அது பயன்படவேண்டுமே தவிர ஒருவரை அழிப்பதற்கு பயன்படுத்தக்கூடாது. மேலும் அளவுக்கு மீறிய இணையதள வன்முறைகளுக்கு சட்டநடவடிக்கைகளும் நியாயமான தண்டனைகளும் வழங்கப்படவேண்டும். சட்ட அமலாக்கம், புலன்விசாரணைகள் விரைந்துஎடுக்கப்படவேண்டும். இல்லை என்றால் இது ஒரு பெரிய சமூகநோயாக மாறி, நாகரிகமான சமூகச் சூழலைநாசப்படுத்திவிடும் எனவும் டத்தோஸ்ரீ தெய்வீகன்கருத்துரைத்தார்.

ராமேஸ்வரி ராஜா – பிரகாஷ் வேலு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here