மசூதி, காபா பொறிக்கப்பட்ட மதியடிகள் விற்பனை தொடர்பில் இருவர் கைது

ஜார்ஜ் டவுனில் உள்ள ஒரு பஜாரில் மசூதி மற்றும் காபாவின் படங்கள் இடம்பெற்ற மிதியடிகளை விற்பனை செய்தது தொடர்பில் போலீஸ் விசாரணைக்கு உதவுவதற்காக உள்ளூர் ஆடவர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். பினாங்கு காவல்துறையின் பொறுப்புத் தலைவர் அல்வி ஜைனால் அபிடின் கூறுகையில், 26 மற்றும் 41 வயதுடைய அவர்கள்  வணிக உரிமையாளர் மற்றும் ஊழியர் என தெரிவித்தார்.

மதியடி விற்பனை தொடர்பாக போலீசாருக்கு கிடைத்த புகாரினை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். புகார் அளித்தவரின் கூற்றுப்படி, அவர் கடந்த சனிக்கிழமை பஜாரில் இருந்தபோது, ​​விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதியடிகளை பார்த்தார். அவர் மதியடிகளை வாங்கி வந்த, பின்னர் காவல்துறையில் புகார் அளித்தார் என்று அல்வி இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மற்றவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தில் குற்றவியல் சட்டத்தின் 298வது பிரிவின் கீழும், சிறு குற்றங்கள் சட்டம் 1955 இன் பிரிவு 14ன் கீழ் அவமதிக்கும் நடத்தைக்காகவும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here