3 பல்கலைக்கழக மாணவர்கள் பலி: விபத்திற்கு காரணமான மாதுவிற்கு 4 நாட்கள் தடுப்புக்காவல்

கோல தெரங்கானு: நேற்றிரவு மூன்று யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாரா (UiTM) டுங்குன் மாணவர்கள் உயிரிழந்தற்கு காரணம் என நம்பப்படும் பெண் ஓட்டுநர் இன்று முதல் நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 49 வயதான பெண்ணுக்கு எதிரான விளக்கமறியலில், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) வரை மாஜிஸ்திரேட் நூர் அமிரா பாத்திஹா உஸ்மான் அவர்களால் வழங்கப்பட்டது. மூன்று குழந்தைகளின் தாயான  மனநலம் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் இல்லத்தரசி காலை 9 மணியளவில் கோல தெரெங்கானு நீதிமன்ற வளாகத்திற்கு வந்தார்.

முன்னதாக, தெரெங்கானு துணை போலீஸ் தலைவர் டத்தோ வான் ருக்மான் வான் ஹாசன் இரவு 7.35 மணியளவில் நடந்த சம்பவத்தில், மூன்று UiTM Dungun வளாக மாணவர்கள் இறந்தனர். மேலும் ஒரு மாணவர் படுகாயமடைந்தார். பாதிக்கப்பட்ட நான்கு பேரும் இரவு உணவிற்குப் பிறகு வளாகத்திற்குத் திரும்பியபோது இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார். இந்த வழக்கு பிரிவு 41(1) சாலை போக்குவரத்து சட்டம் 1987ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here