இஸ்கண்டார் புத்திரி:
நேற்றுக் காலை தீப்பிடித்த சவுத்தேண் இண்டஸ்ட்ரியல் லாஜிஸ்டிக்ஸ் கிளஸ்டர்ஸ் (SILC) தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தீ சம்பவத்தை தொடர்ந்து, அங்கு துர்நாற்றம் ஏற்பட்டது.
இருப்பினும் மாநில சுற்றுச்சூழல் துறை (DoE) அதிகாரிகள் அந்த இடத்தில் காற்றின் தரத்தை சோதனை செய்தனர் என்றும், மேற்கொள்ளப்பட்ட சோதனையில், காற்றில் இரசாயன மாசுபாட்டின் தடயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் ஜோகூர் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் லிங் தியான் சூன் கூறினார்.

நேற்றுக்காலை 11.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டபோது, நான்கு தொழிற்சாலைகள் பெருமளவில் சேதமடைந்தன, அதே நேரத்தில் மூன்று வங்காளதேசத் தொழிலாளர்கள் தீக்காயங்களுக்கு ஆளாகினர்.
குறித்த தொழிற்சாலையில் இரசாயன பொருட்களை சேமித்து வைதிருந்ததாகவும், இது காற்று மாசுபாட்டிற்கு வழிவகுக்கும் என்றும், அப்பகுதியில் கறுப்பு மழை பெய்து மேலும் ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியது என்று லிங் கூறினார்.
இருப்பினும், நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், காற்றில் எந்த இரசாயன மாசுபாடுகளும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.









