வியட்னாம்:
44வது மற்றும் 45வது ஆசியான் உச்சி மாநாடுகள் மற்றும் அது தொடர்பான கூட்டங்களின் முடிவடைந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை (அக் 11) லோவோஸிடமிருந்து ஆசியான் தலைமைப் பொறுப்பை அதிகாரப்பூர்வமாக மலேசியா ஏற்றுக்கொண்டது.
ஆசியன் நிறைவு விழாவின் இறுதியில் உரையாற்றிய லாவோஸின் பிரதமர் சோனெக்சே சிபாண்டோன் கூறுகையில், லாவோஸ் தலைமைப் பதவி ஏற்றுக்கொண்ட காலம் முழுவதும ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு தெரிவித்த அனைத்து பிரதிநிதிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.
அதன் பின்னர் தலைமைபொறுப்பை எடுத்துக் கொண்ட நம்நாட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உரையாற்றியபோது, ஆசியானின் முக்கிய மதிப்புகள் மற்றும் முன்னுரிமைகளை நிலைநிறுத்துவதற்கான மலேசியாவின் நிலைத்தன்மையை மீண்டும் உறுதிப்படுத்தினார், அத்தோடு மலேசியாவின் தலைமையின் கீழ், தென்கிழக்கு ஆசியாவை அமைதியான, நிலையான மற்றும் செழிப்பான பிராந்தியமாகப் பேணுவதில் இக்குழு உறுதியுடன் இருக்கும் என்பதை வலியுறுத்தினார்.









